
வாழ்க்கைத் தேர்வில்...
(1995 பெப்ரவரி 1- 15 தேதி ஜனனி பத்திரிகையில் வெளிவந்த கவிதை)
உயர்தரம் கற்று
உத்தியோகம் பெற
படிபடியால் ஏறி
தேய்ந்தன கால்கள்!
ஆனால்
இன்னும் நான்
நண்பர்களுக்கு
தேர்வுக் குதிரையாய்!
அடித்தன
அவர்களுக்கு யோகம்
ஆனால்
இன்னமும் நான்!
எனது
நண்பர்களின்
புன்முறுவலுக்கு
அர்த்தம் காணாமல்....
www.vaanavarkhon.tk
கவிதை சிறப்பா இருக்கு.... இன்னும் கொஞ்சம் மெருகேற்றமும்.... சட்டென்று பிடிபடவில்லை.
பதிலளிநீக்குநன்றி சி.கருணாகரசு,
பதிலளிநீக்குஇக் கவிதை ஜனனி எனும் பத்திரிகையில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வெளி வந்தது, அப்போது வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்குண்டு நொந்து போயிருந்த வேளையில் பதிவு செய்திருந்தேன், ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கின்ற போது இன்னும் மெருகேற்றி எழுதியிருக்கலாம் என எண்ணத் தோன்றுவதுடன் சிரிப்பாகவும் இருக்கின்றது.
15 ஆண்டுகளுக்கு முன் என்றால் கவிதையின் சாரம் சரிதான்...... மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து எழுதுங்க
பதிலளிநீக்கு