வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
தேனீ தேன் சேர்க்குமாப் போல்
சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில்
செதுக்கிய வீட்டுடன்
சொத்திழந்து
உயிரைத் தப்புவிக்க
உண்ண உணவோ
உடுக்க உடையோ யின்றி
நடைப் பிணமாய்
பரதேசியால் அலைந்து
வந்து விழும் வெடிகுண்டில்
சதைப்பிண்டங்கள் சிதிலமடைய
உறவுடன்
கூடவிருந்தவர்களை இழந்து
இலக்கங்களே நாமமென
முகவரியிழந்த மனிதர்களாய்
வானத்தைக் கூரையாக்கி
வாழ நிர்ப்பந்திக்கபட்ட
ஊனமுற்ற உயிரினம்!
www.vaanavarkoon.tk
உணர்வுள்ள கவிதை...என்னத்தச் சொல்ல.
பதிலளிநீக்குஎப்படிச் சொல்ல கருணாகரசு,
பதிலளிநீக்குஎம்மினத்திற்குத் திணிக்கப்பட்ட கொடூரத்தை!
நன்றி.
உன் வரிகளுக்குள் வீழ்ந்த
பதிலளிநீக்குஎன் இதயம்
வலிகளை சூடிக்கொண்டு
துடிக்கின்றது வலி சுமந்து......;
எந்தன் உயிர்களுக்கேன் இந்நிலை....?
இறைவன் இருக்கின்றானா???
முடியவில்லை முன் போல் சிரிப்பதற்கும்
சீரற்ற காலநிலையாய்
எம் உறவுகளின் வாழ்க்கை
மாற்றம் பெற்ற பிறகு
சிறந்த கவிதை
வாழ்த்துக்கள்
//உன் வரிகளுக்குள் வீழ்ந்த
பதிலளிநீக்குஎன் இதயம்
வலிகளை சூடிக்கொண்டு
துடிக்கின்றது வலி சுமந்து......;
எந்தன் உயிர்களுக்கேன் இந்நிலை....?
இறைவன் இருக்கின்றானா???
முடியவில்லை முன் போல் சிரிப்பதற்கும்
சீரற்ற காலநிலையாய்
எம் உறவுகளின் வாழ்க்கை
மாற்றம் பெற்ற பிறகு
சிறந்த கவிதை
வாழ்த்துக்கள்//
நன்றி கீர்த்தி,
அரவணைப்பார்
எவருமின்றி
நாதியற்று
மௌனித்து
கிடக்கிறது
தமிழினம்.