செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பிரசவம்! - கவிதை


எழுதுகோலின்
மகவுக்கு
மங்கல
வெளியீடு...!

* * *

புத்தக
இடுக்கிலிருந்து
நலிந்துபோன
படைப்புக்கு
வெள்ளோட்டம்...!

* * *

இருண்ட
வாழ்வின்
அஞ்ஞாதவாச
அரங்கேற்றம்...!

* * *

இடையை
அளக்க
அவையினருக்கு
அரிய சந்தர்ப்பம்...!

* * *

விதவைக்
கடதாசிக்கு
குங்குமப் பொட்டிட்ட
சுமங்கலி
வாழ்க்கை...!

* * *

கலைப் பிரியர்களுக்கு
ஒரு தாயின்
கண்ணீர்க்
காணிக்கை...!

(ஜூலை.02,ஜூலை.08, 1995 தினமுரசு பத்திரிகையில் "தேன்கிண்ணம்" பகுதியில் பிரசுரமாகியது)

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

2 கருத்துகள்:

  1. பிரசுரமான காகித இலக்கியச் சுவடிகளை கணினி யுகத்துக்கு பதிவேற்றம் செய்யும் உங்கள் முயற்சி பாராட்டத் தக்கதே, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails