வெள்ளி, 30 ஜூலை, 2010

வாழ்க்கைத் தேர்வில் - கவிதை



வாழ்க்கைத் தேர்வில்...

(1995 பெப்ரவரி 1- 15 தேதி ஜனனி பத்திரிகையில் வெளிவந்த கவிதை)

உயர்தரம் கற்று

உத்தியோகம் பெற

படிபடியால் ஏறி

தேய்ந்தன கால்கள்!


ஆனால்

இன்னும் நான்

நண்பர்களுக்கு

தேர்வுக் குதிரையாய்!


அடித்தன

அவர்களுக்கு யோகம்

ஆனால்

இன்னமும் நான்!


எனது

நண்பர்களின்

புன்முறுவலுக்கு

அர்த்தம் காணாமல்....

www.vaanavarkhon.tk

கருத்துக்கள்

3 கருத்துகள்:

  1. கவிதை சிறப்பா இருக்கு.... இன்னும் கொஞ்சம் மெருகேற்றமும்.... சட்டென்று பிடிபடவில்லை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சி.கருணாகரசு,

    இக் கவிதை ஜனனி எனும் பத்திரிகையில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வெளி வந்தது, அப்போது வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்குண்டு நொந்து போயிருந்த வேளையில் பதிவு செய்திருந்தேன், ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கின்ற போது இன்னும் மெருகேற்றி எழுதியிருக்கலாம் என எண்ணத் தோன்றுவதுடன் சிரிப்பாகவும் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  3. 15 ஆண்டுகளுக்கு முன் என்றால் கவிதையின் சாரம் சரிதான்...... மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து எழுதுங்க

    பதிலளிநீக்கு

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails